இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்புக்காக ஜனவரி, 2007
தமிழா.. தமிழா..
தமிழா.. தமிழா..
நாளை நம் நாளே!
தமிழா.. தமிழா..
நாடும் நம் நாடே!
என் வீடு தாய்த் தமிழ்நாடு என்றே சொல்லடா.
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா.
இனம் மாறலாம்..
குனம் ஒன்றுதான்.
இடம் மாறலாம்..
நிலம் ஒன்றுதான்.
மொழி மாறலாம்..
பொருள் ஒன்றுதான்.
தடி மாறலாம்..
கொடி ஒன்றுதான்.
திசை மாறலாம்..
நிலம் ஒன்றுதான்.
இசை மாறலாம்..
மொழி ஒன்றுதான்.
நம் இந்தியா…
அது ஒன்றுதான், இறைவா!!
தமிழா.. தமிழா..
கண்கள் கலங்காதே!
விடியும்.. விடியும்..
உள்ளம் மயங்காதே!
உனக்குள்ளே இந்திய ரத்தம்..
உண்டா? இல்லையா?
ஒன்றான பாரதம் உன்னை
காக்கும் இல்லையா?
நவபாரதம் பொதுவானது.
இது வேர்வையால் உருவானது.
இம்மண்ணிலா?
பிரிவென்பது, இறைவா!!
இந்திரா
நிலா காய்கிறது..
நேரம் தேய்கிற்து..
யாரும் ரசிக்கவில்லையே..
சின்ன கண்கள் மட்டும் உன்னை காணும்.
தென்றல் போகின்றது..
சோலை சிரிக்கின்றது..
யாரும் சுகிக்கவில்லையே..
சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்.
காற்று வீசும் வெயில் காயும் காயும்..
அதில் மாற்றம் ஏதுமில்லையே..
வானும் மண்ணும் நம்மை வாழச்சொல்லும்..
அந்த வாழ்த்து ஓயவில்லை.
என்றென்றும் வானில்..
நிலா காய்கிறது.
இந்த பூமியே.. பூவனம்.
உங்கள் பூக்களை தேடுங்கள்.
இந்த வாழ்க்கையே சீதனம்.
உங்கள் தேவையை கேளுங்கள்.
நிலாவே வா..
முள்வேலியா? முல்லைப்பூவா?
சொல்லு கொஞ்சம் நில்லு.
பூந்தேனே!! நீதானே!!
சொல்லில் வைத்தாய் முள்ளை..
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே..
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே..
ஆகாயம் காணத மேகம் ஏது கண்ணே…
தீயில் விழுந்த…
தாயை காக்கும் மகனா?
இல்லை தாயுமானவனா?
ஓர் சொல்லில் ஓருலகம்..
அம்மா.. அம்மா..
உலகெல்லாம் ஓர் சொல்லில்..
அம்மா.. அம்மா..
நீ சுமந்த பிள்ளையாய்..
நானிருந்தேன்…அம்மா..
நான் சுமக்கும் பிள்ளையாய்..
நீயானாய்.. அம்மா..அம்மா..
எனகேதும் ஆனதுனா..
உனக்கு வேரு பிள்ளையுண்டு.
உனகேதும் ஆனதுனா..
எனக்கு வேரு தாயுமுண்டா?
குஷி
கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்.
சின்ன உளி தட்டி தட்டி எலுப்பும்.
அது கல்லின் தோல்வியா? இல்லை உளியின் வெற்றியா?
மேகங்கள் முட்டிக் கொள்வதாலே
சண்டையென்று பொருளில்லை..
இதழ்கள் பொய் சொல்லும் – இதயம் மெய்சொல்லும்தெரியாதா?
ஜன்னல் வழி உலகம்
ஜன்னல் வழியே..
பயணமானது-
என் மனம்.
சாலையில் செல்லும்
ஒவ்வொருவரையும்
ஆராய்ந்தது.
தோட்டத்தில் பூத்த
பூக்களை எண்ணத்
தொடங்கியது.
வானின் வருகை
பதிவேட்டில் நிலவைத்
தேடியது.
மீண்டும் அடைப்பட்டு
விட்டதோ?
என் மனம் – வீட்டு சிறைக்குள்.
உலகம் தன்னை காண சென்றேன் -
ஜன்னலின் வழியல்ல -
வாழ்க்கையின் வழி.

