இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்புக்காக பெப்ரவரி, 2007

மின்னலே..

மின்னலே.. நீ வந்ததேனடி?
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி?

என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி?
சில நாழிகை நீ வந்து போனது.
என் மாளிகை அது வெந்து போனது.

மின்னலே!! என் வானம் உன்னை தேடுதே!

பால் மழைக்கு காத்திருக்கும் பூமியில்லையா?
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமியில்லையா?
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞனில்லையா?
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா?

கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்..
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்..

தேடல்

ஓவியமாய் படர்ந்தாய்,
இசையாய் கசிந்தாய்,
கவிதையாய் மலர்ந்தாய்,
காவியமாய் விரிந்தாய்,
நீ யாரோ!?

ராஜ ராஜ சோழன் நான்..

ராஜ ராஜ சோழன் நான்.
எனை ஆளும் காதல் தேசம் நீதான்.
பூவே! காதல் தீவே!

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே!
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே!

உன் ராக மோகனம், என் காதல் வாகனம்.
செந்தாமரை, செந்தேன்மழை, என் ஆவி நீயே தேவி.

என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே!

சங்கீத மேகம்..

சங்கீத மேகம், தேன் சிந்தும் நேரம்.
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்.

நாளை என் கீதமே!!
எங்கும் உலாவுமே!!
என்றும் விழாவே என் வாழ்விலே.

போகும் பாதை தூரமே,
வாழும் காலம் கொஞ்சமே.
ஜீவசுகம் பெற நாத நதியினில் நீ நீந்தவா..
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்.

கேளாய் பூமனமே!!

உள்ளம் என்னும் ஊரிலே,
பாடல் என்னும் தேரிலே,
நாளும் கனவுகள் ராஜபவனிகள் போகின்றதே!
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அனையா விளக்கே!

கேளாய் பூமனமே!!

ஓ வெண்ணிலா..

ஓ வெண்ணிலா..
இரு வானிலா?
நீ?
ஓ நண்பனே…
அறியாமலா?
நான்?

கண்ணே கண்ணே காதல் செய்தாய்.
காதல் என்னும் பூவை நெய்தாய்.
நண்பன் அந்த பூவை கொய்தால்..
ஓ நெஞ்சே!
நெஞ்சே! நீயென் செய்வாய்?

மழை நீரில் வானம் நனையாதம்மா..
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா..
எனைக் கேட்டு காதல் வரவில்லையே!!
நான் சொல்லி காதல் விடவில்லையே!!

மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா.
இறந்தாலும் காதல் இறக்காதம்மா.

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா?
எனதல்ல அதுவும் உனதல்லவா?
எதை கேட்ட போதும் தரக்கூடுமே!!
உயிர் கூட உனக்காய் விட கூடுமே!!

தருகின்ற பொருளாய் காதல் இல்லை.
தந்தாலே காதல் காதல் இல்லை.

காத்திருப்பு

காத்திருக்கும்
நேரம் கூட
சுகமானது….

-காதலிக்கும் போதும்..
-தாயாகும் போதும்..

வா வெண்ணிலா..

வா வெண்ணிலா..
உன்னைத்தானே..
வானம் தேடுது.

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரைப்போட்டு உன்னை மறைத்தாலே பாவம்.

ஒருமுறையேனும்
திருமுகம் காணும்
வரம் தர வேண்டும்.
எனக்கது போதும்.

மலர்போன்ற பாதம் நடக்கின்ற போது.
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்.

பழைய வரவுகள் »