இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்புக்காக ஏப்ரல், 2007
கண்ணால் பேசும் பெண்ணே!
கண்ணால் பேசும் பெண்ணே!
என்னை மன்னிப்பாயா?
ஒரு கவிதை தமிழில் கேட்டேன்!
என்னை மன்னிப்பாயா?
நிலா பேசுவதில்லை.. அது ஒரு குறை இல்லையே!
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையிலெங்கும் பிழையில்லையே!
மௌனம் பேசும் போது சத்தம் கேட்க மாட்டேன்.
மூன்றாம் பிறையின் முன்னே, நிலவை தேடமாட்டேன்.
எங்கே! குறுநகை எங்கே? குறுமுகை எங்கே? கூறடி.
கண்ணில்! கடல் கொண்ட கண்ணில்! புயல் சின்னம் ஏதோ! தெரியுதடி.
பார்த்து பழக வேண்டாம் பாதி சிரிப்பு போதும்.
வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்.
காதல் கொஞ்சம்..
காதல் கொஞ்சம்! காற்று கொஞ்சம்!
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்!
தூரமெல்லாம் தூரமில்லை
தூவானமாய் தூவும் மழை!
அலுங்காமல் உன்னை அள்ளி
தொடுவானம் வரை செல்வேன்.
விடிந்தாலும் விடியாத
பொன் காலை காண காத்திருப்பேன்.
இயற்கை அன்னை
இலைகள் தன்னோடு இருக்கவில்லை என மரங்கள் நினைத்தால்..
-வசந்தம் ஏது!
பூக்கள் தன்னோடு இருக்கவில்லை என கிளைகள் நினைத்தால்..
-கனிகள் ஏது!
அலைகள் தன்னோடு இருக்கவில்லை என கரை நினைத்தால்..
-கடல் ஏது!
மழைத்துளி தன்னோடு இருக்கவில்லை என மலை நினைத்தால்..
-அருவி ஏது!
இயற்கையின் நியதிகள்…
-மாற்று இல்லாதது.
-மாற்றம் இல்லாதது.
வசந்தம்
மன்னனின் வரவை எண்ணி….
தழைத்து ஆடின மரங்கள்.
மன்னனின் வருகைக்காக…
பூக்களைத் தூவின கிளைகள்.
மாமன்னன் வந்தான்…
கிரகங்களின் தலைவன்…
உயிரின் ஆதாரமான முதல்வன்…
ஆயிரம் கை கொண்ட இறைவன்…
கதிரவன், சூரியன், ஆதவன் எண்ணும்
பெயர் கொண்டவன்.

