இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்புக்காக ஆகஸ்ட், 2007
காதல் பிரியாமல்..
காதல் பிரியாமல்.. கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே!
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வரலாற்றிலே!
என்னை கவியாய் செய்வாயா?
இல்லை கனியாய் செய்தாயா?
காண்பதை எல்லாம் பிழையென்று கொண்டால் வாழ முடியாது பெண்ணே!
கயிறுகள் எல்லாம் பாம்பென கண்டால் கண்கள் உறங்காது கண்ணே!
காதல் மழையே!
காதல் மழையே! காதல் மழையே! எங்கே விழுந்தாயோ?
கண்ணில் உன்னை காணும் முன்னே, மண்ணில் ஒழிந்தாயோ?
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும் பொருளே நீதான்
உயிரே! வாராய்.
கண்ணாடி
ஜன்னல் கண்ணாடியில்
வழிந்து ஓடுவது
மழைத்துளி மட்டுமல்ல-
நீரை பிரிவதால் மேகம் சிந்தும்
கண்ணீர்த்துளியும் கூட.
