இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்புக்காக நவம்பர், 2008
பூக்கள்
பூக்கள் போதாதே!
மனிதம் இறந்து போனால்..
மகுடம் எதற்கிங்கே?
மண்ணில் புதைப்பதற்கா?
கண்ணீர் சிந்தும் இதயப்பூக்கள் தாருங்கள்
விண்ணில் நட்சத்திரமான உறவுகளுக்காக.
ரோஜாப்பூவிதழ்கள்..
வழியெங்கும் ரோஜாப்பூவிதழ்கள்..
தெருவெங்கும் மக்கள் வெள்ளம்..
என்னை வரவேற்க.
நான் கடந்து வந்த பாதையில்..
எத்தனை முட்கள் என்று..
யாருக்கு தெரியும்!
உயிரின் உயிரே..
உயிரின் உயிரே!
உயிரின் உயிரே!
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்.
ஈர அலைகள்
நீரை வாரி
முகத்தில் நிறைக்கும் முழுதும் வேர்க்கின்றேன்.
நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்.
அனைந்த பின்பும் அனலுன் மேலிருந்தேன்.
காலை பனியாக என்னை வாரிகொள்வாய்
நேரம் கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அனைத்து கொண்டாயே! பின்பு
ஏனோ சென்றாய்?
(உயிரின்..)
சுவாசமின்ரி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட
வா பெண்ணே!
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழலெது? நிஜமெது? குழம்பினேன்
வாபெண்ணே!
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரை தேடும்
விலகி போகாதே!
தொலைந்து போவேனே நான்.
(உயிரின்..)
இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம்
வா பெண்ணே!
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன்
வா பெண்ணே!
தாமதிக்கும் ஒவ்வொறு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ! விரல்கள் தாராயோ!
நீ!! நீ!!
(உயிரின்..)
நாட்கள்..
நிச்சயம் செய்வேன் – செவ்வாய்
செய்ய தொடங்கினேன் – புதன்
முடிக்க வேண்டும் – வியாழன்
முடித்தே தீருவேன் – வெள்ளி
செய்து முடித்தேன் – சனி
நாளை பார்ப்போம் – ஞாயிறு
வழியே, என் உயிர் வழியே!
வழியே, என் உயிர் வழியே! நீ உலவுகிறாய் என் விழி வழியே!
சகியே, என் இளம் சகியே! உன் நினைவுகளால் நீ துரத்திறுயே!
மதியே, என் முழு மதியே! பெண் பகலிரவாய் நீ படுத்திறுயே!
நதியே, என் இளம் நதியே! உன் அலைகளினால் நீ உரசுறுயே!
யாரோ மனதிலே? ஏனோ கனவிலே?
நீயா உயிரிலே? தீயாய் தெரியுதே!
காற்று வந்து மூங்கில் என்னை பாட சொல்கின்றதோ!
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ!
(வழியே..)
மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே!
தினம் தினம் நியாபகம் வந்து ரனம் ரனம் தந்ததே!
அலைகளின் ஓசையில் கிழிஞ்சலாய் வாழ்கிறேன்.
நீயோ! முழுமையாய்
நானோ! வெறுமையாய்
நாமோ! இனி சேருமா?
(யாரோ..)
மிக மிக கூர்மையாய் என்னை ரசித்ததுன் கண்கள் தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததுன் வார்த்தை தான்
கண்களை காணவே இமைகளே மறுப்பதா?
வெண்ணீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா
நானும் வெறும் கானலா?
(யாரோ..)
(வழியே..)

