இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்புக்காக பெப்ரவரி, 2009

நெஞ்சம்

gurlzgroup__005

நெடுஞ்சாலை பேருந்து
நெரிசலில் சிக்கி
நிறுத்தத்தை தவறவிட்ட
சிறுமியைப் போல
நெஞ்சம் பதைக்கிறதே!
சொல்லவந்த சொல்லை
சொல்லாமல் மெல்ல
உன்னை கடந்து
செல்லும் போது.

காயம்

சொல்லாலோ செயலாலோ

என்னை காயப்படுத்தும் எதுவானாலும்

அதை நான் ஏற்கமாட்டேன்.

அப்படி நான் ஏற்றுக்கொண்டால்..

அது எனக்கு நானே இளைக்கும் தீங்கன்றி வேரில்லை.

வெண்ணிலவு

நிலவு பெண்ணானாய்
காதல் கொண்ட ஆடவர்க்கு.

சந்திரனாக ஒளிர்ந்தாய்
காதல் கொள் பெண்டீர்க்கு.

அம்புலியானாய்
கதை கேட்கும் பிள்ளைக்கு.

வழித்துணையானாய்
நான் நடந்து செல்லும் பாதைக்கு.

துளி

42-17256133

ஜன்னல் கம்பிகளில்..
பூக்களின் இதழ்களில்..
கண்ணாடி கதவுகளில்..
பச்சை இலைகளில்..
எங்கிருந்தாலும்..

உலர் நிலத்தில்..
அலை கடலில்..
மலர் குடையில்..
என் கை விரலில்..
எங்கு விழுந்தாலும்..

துளியே! நீ அழகு.