இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்புக்காக ஏப்ரல், 2009
மழைத்தாய்

வேண்டுதல்
என் காதல் இசை

தேடி தேடி களைத்த பின்னும்
காதல் விடவில்லை
நாடி நாடி பருகிய பின்னும்
ஆசை விடவில்லை
ஓடி ஓடி ஒளிந்தாலும்
அகப்பட்டு கொள்கிறாய்
நான் வாடி விடாமல்
என்னை உயிர் பெற செய்கிறாய்

என் நிழலாய் பின்தொடர்கிறாய்
என்னுலகம் மறக்க செய்கிறாய்
என்னுள்ளே தொலைய செய்கிறாய்
எனை மறந்து சிரிக்க செய்கிறாய்
எப்போதும் நினைவில் நிற்கிறாய்
என் காதல் நீயன்றி வேரில்லை.
நீதானே..
சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே!
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே!
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே!
சில நினைவுகள் நினைவுகள் தான் மூள்கா மூள்காதே!
நீதானே.. நீதானே.. என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே.. நீதானே.. என் இமைகளை நீவினாய்
நீ ஓடும் பாதையில் நெஞ்சமோ
உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ
என் விழியின் கறுமணியில் தேடிப்பார்
உன் காலடி தடங்களை காட்டுமே
பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே!
உன் சிறு இமை பிரிவில் தெரிந்ததே!
விபத்துக்கள் எனக்குள் நடக்கவே!
உன் நினைவுகள் தப்பி செல்ல வைக்குதே!
உன்மைகள் சொல்வதும்
உண்ர்ச்சியை கொள்வதும்
உயிர்வரை செல்வதும்
நீதானே…….
நீ தேட தேட ஏன் தொலைகிறாய்?
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்!
நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய்
என் உயிரை இரவலாய் கேட்கிறாய்.
இதய சதுக்கம் நடுங்குதே!
உன் நியாபகம் வந்த பின்பு அடங்குதே!
அலையில் ஒதுங்கும் கிழிஞ்சலாய்
என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே!
ஒரு கணம் சாகிறேன்
மறு கணம் வாழ்கிறேன்
இரண்டுக்கும் நடுவிலே
நீதானே…….
படம் – சர்வம்



