இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்புக்காக பதுமையின் ரசனைகள்
அன்பே சுகமா!
அழகே சுகமா?
உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா?
உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா?
உன் தனிமை சுகமா?
வீடு வாசல் சுகமா?
உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா?
உன் பொய்கள் எல்லாம் சுகமா?
அழகே உனை பிரிந்தேன்
என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கமுன்று
விளக்கை அனைத்து அழுதேன்
அன்பே உனை வெறுத்தேன்
என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு
உயிரில் பாதி குறைந்தேன்.
பழைய மாலையில் புதிய
பூக்கள் தான் சேராதா!
பழைய தாலியில் புதிய
முடிச்சுகள் கூடாதா!
வாழ்க்கை ஓர் வட்டம் போல்
முடிந்த இடத்தில் தொடங்காதா!
வாழ்க்கை ஓர் வட்டம் போல்
முடிந்த இடத்தில் தொடங்காதா!
சிறுமை கண்டு தவித்தேன்
என் சிறகில் ஒன்றை முறித்தேன்
ஒற்றை சிறகில் ஊனபறவை
எத்தனை தூரம் பறப்பேன்!
அன்பே உனை அழைத்தேன்
உன் அஹிம்சை இம்சை பொறுத்தேன்
சீதை குளித்த நெருப்பில் என்னை
குளிக்க சொன்னால் குளித்தேன்
அழுத நீரில் கரைகள் போய்விடும்
தெரியாதா!
குறைகள் உள்ளது மனித உறவுகள்
புரியாதா!
இது கண்ணீர் நடத்தும் பேச்சுவார்த்தை
உடைந்த மனங்கள் ஒட்டாதா!
இது கண்ணீர் நடத்தும் பேச்சுவார்த்தை
உடைந்த மனங்கள் ஒட்டாதா!
கன்னம் இரண்டு சுகமா?
அதில் கடைசி முத்தம் சுகமா?
உந்தன் கட்டில் சுகமா?
என் ஒற்றை தலையணை சுகமா?
படம் – பார்த்தாலே பரவசம்.
நீயின்றி நானுமில்லை..
தொடுவானம் சிவந்து போகும்
தொலைதூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான்
நெறுங்கி வந்தேனே!
விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க..
படம்: வாரணம் ஆயிரம்.
காதல் சடுகுடு
உன்னுள்ளம் நான் காண
என் ஆயுள் போதாது
என்னன்பை நான் சொல்ல
உன் காலம் போதாது
என் காதல் எனயென
உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம்
சொல்லாமல் போகாது.
கொண்டாலும் கொன்றாலும்
என் சொந்தம் நீதானே!
நின்றாலும் சென்றாலும்
உன் சொந்தம் நான்தானே!
படம் – அலைபாயுதே
உன்ன நெனச்சே..
கொட்டும் மழைக்காலம்
உப்பு விற்க போனேன்
காற்றடக்கும் நேரம்
மாவு விற்க போனேன்
அந்த வானம் அழுதா தான்
இந்த பூமியே சிரிக்கும்.
வானம் போல் சில பேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்.
படம்: அபூர்வ சகோதரர்கள்.
யாக்கை திரி
யாக்கை திரி
காதல் சுடர் -அன்பே!
ஜீவன் நதி
காதல் கடல் -நெஞ்சே!
நிலவில் பிழை
காதல் திருத்தம் -நெஞ்சே!
இருதயம் கல்
காதல் சிற்பம் -அன்பே!
ஜென்மம் விதை
காதல் பழம்
லோகம் த்வைத்தம்
காதல் அத்வைத்தம்
சர்வம் சூன்யம்
காதல் பின்யம்
மானுடம் மாயம்
காதல் அமரம்
படம்: ஆயுத எழுத்து.
நின்னுகோரி
ஒரு கிளி தனித்திருக்க..
உனக்கென தவமிருக்க..
இருவிழி சிவந்திருக்க..
இதழ்மட்டும் வெலுத்திருக்க..
படம் – அக்னி நட்சத்திரம்.
நினைத்தது யாரோ!
நினைத்தது யாரோ! நீதானே!
தினம் உனை பாட நாந்தானே!
நினைப்பது நான்தான் நீயில்லையே!
மறந்தது நீதான் நானில்லையே!
படம் – பாட்டுக்கு ஒரு தலைவன்.