செப்டம்பர் 26, 2009 இல் 4:22 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள்

வண்ணவில் ஓடம்
அதில்
சின்ன கொடியும்
மின்னல் துடுப்பும்
மேக காடு
அதில்
ஒவ்வொரு மரமும்
ஒவ்வொரு உரு.
மழை கனிகள்
ஈயும் போது
மேள தாளம்
கும்மாளம்.
நட்சத்திர மீன்கள்
பிடித்து
சூரிய குளத்தில்
சேமித்தாள்.
பாதி இரவுகள்
நட்சத்திரங்கள் தொலைந்தன
மீதி இரவுகள்
நட்சத்திரங்கள் மீண்டன.
களவு செய்தது
நிலா கள்ளன்
திருந்த செய்தது
வானவள் உள்ளம்.
செப்டம்பர் 24, 2009 இல் 4:20 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள்

கண்டங்கள் தாண்டி பறக்கும் விமானமல்ல
கிரகங்கள் கடந்து பாய்ந்து செல்லும் விண்கல்லல்ல
யுகங்களை ஊடுறுவி பார்வையிடும் பிரம்மனுமல்ல
கண்சிமிட்டிடும் நேரத்தில் மின்னலாய் மீண்டு
கைவிரல்களுக்குள் ஒளிந்துக்கொள்ளும் என் பிரிய
மாய மின்மினி.
செப்டம்பர் 22, 2009 இல் 5:39 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள்
வண்ணம் தூவி வரைந்தனை..
எண்ணம் யாவும் நிறைந்தனை..
வாசல் தாண்டும் முன்னரும்..
வாசல் கடந்த பின்னரும்..
உன் இருப்பை உணர்த்தினை.
ஒவ்வொரு அனுவிலும் ஆச்சரியம்
பேரண்டம் தாண்டியும் ஆச்சிமை.
ஏப்ரல் 16, 2009 இல் 4:19 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள்
தனிமை
சில நேரங்களில் அழுகை தரும்
சில நேரங்களில் ஆற்றல் தரும்
ஏப்ரல் 10, 2009 இல் 4:18 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள்

முட்கள் தேவையில்லை
உன் சொற்களே போதும்
என்னை காயப்படுத்த..
ஏப்ரல் 8, 2009 இல் 4:15 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள்
கோடையின் வெயிலில்
தினம் துவண்டு போனேன்
ஆதரவாய் மேகங்கள்
கறுத்தன -
நீ வருவாய் என
சிறு செடியை நட
கையில் ஏந்தினேன்
மழைத்தாயவள்
நீ வந்தால்
சிறு வித்தும் முளைக்கும்
என் மனமும் குளிரும்,
ஏப்ரல் 7, 2009 இல் 8:36 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள்
உவகை தா
உற்சாகம் தா
உழைப்பு தா
உயர்வு தா
உரிமை தா
உறவு தா
உணர்வு தா
உலகம் தா
உன்னை மறக்கும்
உள்ளம் மட்டும்
தந்துவிடாதே!