இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்பு - அழகு
அழகு
கால் தொடும் அலை அழகு
காது வருடும் காற்று அழகு
தரை விழும் நிழல் அழகு
மொட்டை மாடி நிலா அழகு
காலை நேர சூரியன் அழகு
மழைக்காலத்து மரம் அழகு
நிலவொளி தென்னங்கீற்று அழகு
விரல் தொடும் அருவி நீர் அழகு
வாழும் காலம் வரை உண்மை நட்பு அழகு.

