இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்பு - சிம்ரன்
அன்பே சுகமா!
அழகே சுகமா?
உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா?
உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா?
உன் தனிமை சுகமா?
வீடு வாசல் சுகமா?
உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா?
உன் பொய்கள் எல்லாம் சுகமா?
அழகே உனை பிரிந்தேன்
என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கமுன்று
விளக்கை அனைத்து அழுதேன்
அன்பே உனை வெறுத்தேன்
என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு
உயிரில் பாதி குறைந்தேன்.
பழைய மாலையில் புதிய
பூக்கள் தான் சேராதா!
பழைய தாலியில் புதிய
முடிச்சுகள் கூடாதா!
வாழ்க்கை ஓர் வட்டம் போல்
முடிந்த இடத்தில் தொடங்காதா!
வாழ்க்கை ஓர் வட்டம் போல்
முடிந்த இடத்தில் தொடங்காதா!
சிறுமை கண்டு தவித்தேன்
என் சிறகில் ஒன்றை முறித்தேன்
ஒற்றை சிறகில் ஊனபறவை
எத்தனை தூரம் பறப்பேன்!
அன்பே உனை அழைத்தேன்
உன் அஹிம்சை இம்சை பொறுத்தேன்
சீதை குளித்த நெருப்பில் என்னை
குளிக்க சொன்னால் குளித்தேன்
அழுத நீரில் கரைகள் போய்விடும்
தெரியாதா!
குறைகள் உள்ளது மனித உறவுகள்
புரியாதா!
இது கண்ணீர் நடத்தும் பேச்சுவார்த்தை
உடைந்த மனங்கள் ஒட்டாதா!
இது கண்ணீர் நடத்தும் பேச்சுவார்த்தை
உடைந்த மனங்கள் ஒட்டாதா!
கன்னம் இரண்டு சுகமா?
அதில் கடைசி முத்தம் சுகமா?
உந்தன் கட்டில் சுகமா?
என் ஒற்றை தலையணை சுகமா?
படம் – பார்த்தாலே பரவசம்.
காதல் பிரியாமல்..
காதல் பிரியாமல்.. கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே!
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வரலாற்றிலே!
என்னை கவியாய் செய்வாயா?
இல்லை கனியாய் செய்தாயா?
காண்பதை எல்லாம் பிழையென்று கொண்டால் வாழ முடியாது பெண்ணே!
கயிறுகள் எல்லாம் பாம்பென கண்டால் கண்கள் உறங்காது கண்ணே!
நீயில்லை, நிழலில்லை..
நீயில்லை, நிழலில்லை..
நிழல் கூட துணையில்லை.
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்.
அழுகின்றேன் இப்போது நீயென் கண்ணீராகின்றாய்.
உன் பேரை நான் எழுதி..
என்னை நான் வாசித்தேன்.
எங்கேயோ எனை தேடி
உன்னில்தான் சந்தித்தேன்.
காதலே! காதலே!
ஊஞ்சலாய் ஆனதே….
நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா? சொல்! சொல்!
பகலின்றி வாழ்ந்திருந்தேன்..
சூரியனை தந்தாயே!
நிறமின்றி வாழ்ந்திருந்தேன்..
வானவில்லை தந்தாயே!
கூந்தலில் சூடினாய்
வாடவும் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா? சொல்! சொல்!