இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்பு - ஜன்னல்

கண்ணாடி

ஜன்னல் கண்ணாடியில்
வழிந்து ஓடுவது
மழைத்துளி மட்டுமல்ல-
நீரை பிரிவதால் மேகம் சிந்தும்
கண்ணீர்த்துளியும் கூட.

ஜன்னல் வழி உலகம்

ஜன்னல் வழியே..
பயணமானது-
என் மனம்.

சாலையில் செல்லும்
ஒவ்வொருவரையும்
ஆராய்ந்தது.

தோட்டத்தில் பூத்த
பூக்களை எண்ணத்
தொடங்கியது.

வானின் வருகை
பதிவேட்டில் நிலவைத்
தேடியது.

மீண்டும் அடைப்பட்டு
விட்டதோ?

என் மனம் – வீட்டு சிறைக்குள்.

உலகம் தன்னை காண சென்றேன் -
ஜன்னலின் வழியல்ல -
வாழ்க்கையின் வழி.

மழைக்காலம்

ஜன்னலின் வழியே..
மழைச்சத்தம் -
மண் வாசம் -
குளிரான காற்று.

ஜன்னலின் உள்ளே..
என்றும் மனதில் நிற்கும்
இதமான பாடல் -
சூடான பலகாரம் -
சாய்வான நாற்காலி.