இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்பு - ஜோதிகா
உயிரின் உயிரே..
உயிரின் உயிரே!
உயிரின் உயிரே!
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்.
ஈர அலைகள்
நீரை வாரி
முகத்தில் நிறைக்கும் முழுதும் வேர்க்கின்றேன்.
நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்.
அனைந்த பின்பும் அனலுன் மேலிருந்தேன்.
காலை பனியாக என்னை வாரிகொள்வாய்
நேரம் கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அனைத்து கொண்டாயே! பின்பு
ஏனோ சென்றாய்?
(உயிரின்..)
சுவாசமின்ரி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட
வா பெண்ணே!
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழலெது? நிஜமெது? குழம்பினேன்
வாபெண்ணே!
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரை தேடும்
விலகி போகாதே!
தொலைந்து போவேனே நான்.
(உயிரின்..)
இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம்
வா பெண்ணே!
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன்
வா பெண்ணே!
தாமதிக்கும் ஒவ்வொறு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ! விரல்கள் தாராயோ!
நீ!! நீ!!
(உயிரின்..)
கண்ணால் பேசும் பெண்ணே!
கண்ணால் பேசும் பெண்ணே!
என்னை மன்னிப்பாயா?
ஒரு கவிதை தமிழில் கேட்டேன்!
என்னை மன்னிப்பாயா?
நிலா பேசுவதில்லை.. அது ஒரு குறை இல்லையே!
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையிலெங்கும் பிழையில்லையே!
மௌனம் பேசும் போது சத்தம் கேட்க மாட்டேன்.
மூன்றாம் பிறையின் முன்னே, நிலவை தேடமாட்டேன்.
எங்கே! குறுநகை எங்கே? குறுமுகை எங்கே? கூறடி.
கண்ணில்! கடல் கொண்ட கண்ணில்! புயல் சின்னம் ஏதோ! தெரியுதடி.
பார்த்து பழக வேண்டாம் பாதி சிரிப்பு போதும்.
வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்.
காதல் கொஞ்சம்..
காதல் கொஞ்சம்! காற்று கொஞ்சம்!
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்!
தூரமெல்லாம் தூரமில்லை
தூவானமாய் தூவும் மழை!
அலுங்காமல் உன்னை அள்ளி
தொடுவானம் வரை செல்வேன்.
விடிந்தாலும் விடியாத
பொன் காலை காண காத்திருப்பேன்.
குஷி
கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்.
சின்ன உளி தட்டி தட்டி எலுப்பும்.
அது கல்லின் தோல்வியா? இல்லை உளியின் வெற்றியா?
மேகங்கள் முட்டிக் கொள்வதாலே
சண்டையென்று பொருளில்லை..
இதழ்கள் பொய் சொல்லும் – இதயம் மெய்சொல்லும்தெரியாதா?