இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்பு - பயணம்

பயணம்


ஏதோ ஒன்றைத்தேடி
பயணித்து கொண்டே இருப்பது தான்
வாழ்க்கை.

தொடரும்…


பயணிகள் மாறி போனாலும்..
பயணங்கள் முடிவதில்லை..

பயணித்த பாதை வெவ்வேறானாலும்..
பாதைகள் முடிந்து போவதில்லை..

வாழ்க்கையின் தேடல்கள் தொடரும்…

நாடோடி

நாடோடி

முடிவிலா பயணம் செல்ல
தொலைதூர குறிக்கோள் கொண்டு
சேரும் இடமறியாமல்

துணிந்தே புறப்பட-
பாதைகள் பலவாகும்
நேரம் மிகக்குறைவாகும்

இதையறியாமல்-
சொல்வதை கேளாத மனம் அதனில்
ஓயாத எண்ணங்கள் பல கொண்டு
அன்பெனும் ஆயுதம் அதை கொண்டு
அழிவில்லாத தூய ஆத்மா அதனைத்
தேடி பயணமது தொடர்ந்தது.