எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்
தொகுப்பு - மழை
ஆகஸ்ட் 1, 2007 இல் 9:30 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: ஜன்னல், மழை

ஜன்னல் கண்ணாடியில்
வழிந்து ஓடுவது
மழைத்துளி மட்டுமல்ல-
நீரை பிரிவதால் மேகம் சிந்தும்
கண்ணீர்த்துளியும் கூட.
ஜூன் 26, 2006 இல் 11:11 மு.பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: இதம், ஜன்னல், மழை

ஜன்னலின் வழியே..
மழைச்சத்தம் -
மண் வாசம் -
குளிரான காற்று.
ஜன்னலின் உள்ளே..
என்றும் மனதில் நிற்கும்
இதமான பாடல் -
சூடான பலகாரம் -
சாய்வான நாற்காலி.
மார்ச் 15, 2006 இல் 7:45 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: இடி, ஒசை, சத்தம், பூமி, மழை, மின்னல், மேகம், வானம்

பூமிபூவில் தேனை ஊற்றும்
அதிசய வண்டு
-கார்மேகம்.
பூமிபூவினை சுற்றி வரும்
கார்மேக வண்டின்
ரீங்காரம்
-மழையின் ஒசை.
கார்மேக வண்டின் வருகையால்
பூமிபூ மனம் வீசுகிறதா?
பூமிபூ மனம் வீசுவதால்
கார்மேக வண்டின் வருகிறதா?

கார்மேக வண்டின் இரக்கை
மினுமினுப்பானவை
அதன் மினுமினுப்பு சற்றென
தோன்றி மறையும்
தன்மை கொண்டவை
-மின்னல்.

கார்மேக வித்வானின்
மத்தளச் சத்தம்
-இடி.
கார்மேக மங்கையின்
ஜதி பாட்டு
-மழை மண்ணில்
விழும் ஒசை.

பெப்ரவரி 25, 2006 இல் 3:28 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: அருவி, அலை, மழை
மழை மகளின்
அலைபாயும்
வெள்ளை கூந்தல்
-மலையருவி.

பெப்ரவரி 25, 2006 இல் 3:01 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: நடனம், நீர், மழை
நீரின்
பிரமாண்டமான
நடனம்
-மழை.

பெப்ரவரி 25, 2006 இல் 2:17 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: ஒளி, சூரியன், மழை, மேகம்
ஒளி மழை பெய்யும்
வட்ட மேகம்
-சூரியன்.
