இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்பு - மேகம்

மழை








பூமிபூவில் தேனை ஊற்றும்
அதிசய வண்டு
-கார்மேகம்.
பூமிபூவினை சுற்றி வரும்
கார்மேக வண்டின்
ரீங்காரம்
-மழையின் ஒசை.
கார்மேக வண்டின் வருகையால்
பூமிபூ மனம் வீசுகிறதா?
பூமிபூ மனம் வீசுவதால்
கார்மேக வண்டின் வருகிறதா?









கார்மேக வண்டின் இரக்கை
மினுமினுப்பானவை
அதன் மினுமினுப்பு சற்றென
தோன்றி மறையும்
தன்மை கொண்டவை
-மின்னல்.









கார்மேக வித்வானின்
மத்தளச் சத்தம்
-இடி.
கார்மேக மங்கையின்
ஜதி பாட்டு
-மழை மண்ணில்
விழும் ஒசை.


இயற்கை

பூமியை
சுற்றி வரும்
வெள்ளை காற்று
-வெண்மேகம்.

இயற்கை

ஒளி மழை பெய்யும்
வட்ட மேகம்
-சூரியன்.